சர்வதேச பெண்கள் கிரிக்கெட் தரவரிசை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்ட பெண்கள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியலில், 20 ஓவர் போட்டி தரவரிசையில் 291 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 280 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி 270 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

நியூசிலாந்து அணி (269 புள்ளி) 4-வது இடத்துக்கு சரிந்துள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது. இந்தியா (121 புள்ளி) 2-வது இடத்திலும், இங்கிலாந்து (119 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here