பகலை விட இரவில் வெப்பம் அதிகமாகும் !

உலகில் புவி வெப்ப மஃற்றம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எக்ஸிடெர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, புவி வெப்பமடைவதால் உலகளாவிய நிலப்பரப்பில் பகல் மற்றும் இரவுநேர வெப்பமயமாதலில் மாற்றங்கள் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1983 முதல் 2017 ஆண்டு வரை கால இடைவெளியில், பகல் மற்றும் இரவுநேர வெப்பமயமாதலின் சராசரி (வருடாந்திர வெப்பநிலை) 0.25 செல்சியசிற்கும் அதிகமாக உள்ளது. இந்த வெப்பம் சில நேரங்களில், சில இடங்களில் பகல் நேரம் விரைவாக வெப்பமடைந்தாலும் இரவு நேர வெப்பமயமாதல் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்தது.

சமச்சீரற்ற தன்மை என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு பகலில் மேகங்களின் மேற்பரப்பை குளிர்வித்து, அதிகளவு இரவுநேர வெப்ப மயமாதலுக்கு வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை ஈரப்பதமாக மாறுவதோடு அதிக இரவு நேர வெப்பமயமாதலும் தொடர்புடையது என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்கம் இது தாவர வளர்ச்சிக்கு முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகள் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பகல்நேர மற்றும் இரவு நேர தாவர வளர்ச்சியின் வேறுபாடுகள் மழையைப் பொறுத்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. அதிகரித்த இரவு நேர வெப்பமயமாதல் குறைந்த தாவர வளர்ச்சிக்கு வழிவகுத்தது, அங்கு அதிக மழை பெய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here