பெட்டாலிங் ஜெயா போதைப் பொருள் துடைதொழொப்பு பிரிவினர் நடத்திய ஓப்ஸ் சாராங் அதிரடி சோதனையில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
41 பேர் போலீஸ் குழு கடந்த 3/10/2020 இரவு 9.30 தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை லெம்பா சுபாங், பிபிஆர் புத்ரா டாமாய் அடுக்கு மாடி குடியிருப்பில் நடத்திய சோதனையின் போது மேற்கண்ட எண்ணிக்கையிலானோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 505.42 கிராம் ஹெரோயின், 41.14 கிராம் ஷாபு, 2.80 கிராம் கஞ்சா என்று மொத்தம் 549.46 கிராம் எடை கொண்ட பல்வேறு போதைப் பொருள்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 21,949 வெள்ளியாகும்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பேருக்கு ஏற்கனவே போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றப் பதிவு இருப்பதாகவும் மேலும் 2 பேருக்கு எல்எல்பிகே என்ற குற்றப்பதிவு இருப்பதாகவும் பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ஏசானி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களின் குற்றங்களுக்கேற்ப அந்தந்த செக்ஷன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.