ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்தது. ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.இடையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றார்கள். ஆனால், பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்து படம் தியேட்டரில்தான் வரும் என்று தெரிவித்தார்கள்.
இந்நிலையில் மும்பையில் இருந்து ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வரும் இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, 20 நாட்கள் வர்ணனை செய்ய மாட்டேன் என்று நேற்று தெரிவித்தார். அப்போது ‘மூக்குத்தி அம்மன்’ புரமோஷனுக்காகச் சென்னை செல்கிறேன் என்றார். தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில் பட புரமோஷன் என்று அவர் சொன்னது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. படத்தை ஓடிடி தளத்திற்கு விற்றுவிட்டார்களாம்.
தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாக உள்ளதாம். அதற்கான புரமோஷன் வேலைகளுக்காகத்தான் பாலாஜி சென்னை வருகிறார். இதன் மூலம் படத்தின் ஓடிடி ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுவிட்டது.