பிரபல விளம்பர நிறுவன நிர்வாகி சீனாவில் கைது

ஷாங்காய்:

லகின் மிகப் பெரிய விளம்பர நிறுவனங்களில் ஒன்றான WPP நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரும் முன்னாள் ஊழியர்கள் இரண்டு பேரும் சீனாவில் கைதாகி இருகிறார்கள்.

ஷாங்காயில் செயல்படும் அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் போலீஸ் அதிகாரிகள் சோதனையும் நடத்தினர்.

கைதானவர்கள் அந்த நிறுவனத்தின் Group M ஊடக வர்த்தகப் பிரிவு சம்பந்தப்பட்டவர்கள் என்று இரண்டு பேர் தெரிவித்தனர்.

அந்த இருவரும் தங்கள் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதன் தொடர்பில் கருத்து கூற WPP மறுத்துவிட்டது.

லண்டனில் செயல்படும் சீனத் தூதரகத்திடம் கேட்டபோது அதுவும் மறுத்துவிட்டது. இந்த விவகாரம் பற்றி ஃபைனான்ஷியல் டைம்ஸ் செய்தித்தாள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டு இருந்தது.

WPP விளம்பர நிறுவனம் 2022ஆம் ஆண்டில் ஈட்டிய வருவாயில் 5% வரை சீனாவிலும் தைவானிலும் கிடைத்தவை என்று அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here