தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ ரண சிங்கம். இந்தப் படம் OTT வழியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இவர் நடிகை டாப்ஸி உடன் இணைந்து பழம்பெரும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஏற்கனவே யோகி பாபு, ரமேஷ் திலக், தேவதர்ஷினி என பல காமெடி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் தற்போது தெலுங்கு காமெடி நடிகரான வெண்ணிலா கிஷோர் என்பவரும் இணைந்துள்ளார்.
இது வெண்ணிலா கிஷோரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக தெரிய வந்துள்ளது.
ஒரே படத்தில் பல காமெடி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.