பயங்கரவாதத்துக்கு நிதி: தப்புமா பாகிஸ்தான்?

பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்த அளிக்கப்பட்டுள்ள அவகாசம் முடிவடையும் நிலையில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி நடவடிக்கை பணிக் குழுவின், ‘கிரே’ நிற பட்டியலில் இருந்து, பாகிஸ்தான் தப்புமா என்பது, இம்மாதம் தெரிய வரும்.

பண மோசடிபயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கப்படுவது, பண மோசடி உள்ளிட்ட சர்வதேச அளவிலான நிதி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டது, எப்.ஏ.டி.எப்., அமைப்பு.ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பில், 39 நாடுகள் உள்ளன.பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது, ஆதரவு அளிப்பது உள்ளிட்டவற்றின் அடிப்படையில், நாடுகள் பட்டியலிடப்படுகின்றன.அவ்வாறு, இந்த அமைப்பின், ‘கிரே’ நிறப் பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு, உலக வங்கி, சர்வதேச நிதியம் உட்பட சர்வதேச அமைப்புகள் கடன் அளிக்காது.

இந்த கிரே நிற பட்டியலில், நம் அண்டை நாடான பாக்., 2018, ஜூனில் இருந்து இடம் பெற்றுள்ளது.அவகாசம்பட்டியலில் இருந்து நீக்குவதற்காக, 27 செயல் திட்டங்கள் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது. இதற்கு, 2019 இறுதிவரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதில், 13 அம்சங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையையும், பாக்., எடுக்கவில்லை. அதனால், கிரே பட்டியலில் தொடர்கிறது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த அமைப்பின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.

இம்மாதம், 21 – 23ல், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் கூட்டம் நடக்க உள்ளது. அதில், பாக்., கிரே நிறப் பட்டியலில் தொடருமா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாக்., சமீபத்தில், பிரபல நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு தடை விதித்துள்ளது.ஆனாலும், அந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து, பாக்.,கில் இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுமுன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி துணைத் தலைவருமான ஆசிப் அலி ச்தாரி மீது, சமீபத்தில் தான், பண மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், ‘பார்க் லேன்’ மோசடி எனப்படும், இஸ்லாமாபாதில் மிகப் பெரிய நிலம், குறைந்த விலைக்கு வாங்கியது தொடர்பான வழக்கு மற்றும் குடிநீர் திட்டத்தில், தனக்கு தெரிந்தவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய வழக்குகளில், சர்தாரி மற்றும் அவரது குடும்பத்தார் மீது, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here