திடீரென பெயரை மாற்றிக்கொண்ட VJ சித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ரா விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சித்து விஜே என இருந்த பெயரை “சித்ரா காமராஜ் விஜே” என்று மாற்றிக்கொண்டுள்ளார். இந்தப் பெயர் அவருடைய வருங்கால கணவருடைய பெயரோ..? என ரசிகர்கள் குழப்பத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here