பருத்தி வீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சூர்யாவின் சகோதரர் ஆவார். முதல் படத்திலேயே பிரம்மாண்ட உச்சத்தை அடைந்தார். அடுத்த படமே லிங்குசாமி இயக்கத்தில் ‘பையா’ படத்தில் நடித்தார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் பாடல்கள் மாபெரும் வெற்றியை பெற்றதோடு, படமும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் முதலில் லிங்குசாமி நடிக்க வைக்க விரும்பியது நயன்தாராவைத்தானாம். ஆனால், சம்பளம் விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததால் அவருக்கு பதில் தமன்னா நடித்ததாக லிங்குசாமி தெரிவித்துள்ளார்.