தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் ஆன இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் உருவாகி வந்த படங்களில் ஒன்று சுல்தான். எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் கார்த்தி இந்த படத்தின் கதையை கேட்டதிலிருந்து இன்று வரை தொடர்ந்து மூன்று வருடங்களாக எங்களை ஒவ்வொரு விதத்திலும் உற்சாகப்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த படம் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டதால் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வெகு விரைவில் படத்தின் டீசர், டிரைலர், புதுப்புது போஸ்டர்கள் போன்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா மற்றும் கார்த்தி என இரு தரப்பு ரசிகர்களும் சுல்தான் படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.