பக்கவிளைவுகள் இல்லை: ‘கோவேக்சின்’ மருந்து 2-ம் கட்ட…

கொரோனா வைரஸ் தொற்றுக்கான ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தின் 2-ம் கட்ட பரிசோதனை நிறை வடைந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத்பயோடெக் நிறுவனமானது, கொரோனா வைரஸ் தொற்று தடுப்புமருந்தை (கோவேக்சின்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி நிலையை எட்டியுள்ளது. மனிதர்களுக்கு அந்த மருந்தை செலுத்திபரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மருந்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. முதல்கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

150-க்கும் மேற்பட்டோருக்கு…

இந்த பரிசோதனை வெற்றிபெற்றதால், 2-ம் கட்டமாக 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்புமருந்து செலுத்தப்பட்டது. அவர்களின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்தனர். இதில் யாருக்கும் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 3-ம் கட்டமாக 100 பேருக்கு பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்களிடம் கேட்ட போது, ‘மனிதர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதிப்பதில் தற்போது 2 கட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில் 3-ம் கட்ட ஆய்வு தொடங்கஉள்ளது. இதுவரை கோவேக்சின் மருந்தால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. ஆனாலும், அந்த மருந்தின் தன்மைமற்றும் செயல்திறன் ஆகியவற்றை தொடர் பரிசோதனைக்குஉட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் 6 மாதம் வரைதேவைப்படலாம்’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here