ராஜஸ்தான் அணியை ஓட விட்ட டெல்லி கேபிட்டல்ஸ்

ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2020 ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில், டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் பலபரீட்சை நடத்தினர். இதுவரை நடந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் டெல்லி வென்றுள்ளது.நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 23 வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ராஜஸ்தான் அணியை ஓட விட்ட டெல்லி :

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்துவீச்சு தேர்வு செய்தார்.தேவையில்லாத ரன் அவுட், தவறான கேட்ச் காரணமாக டெல்லி திணறியது. ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும், மார்க் ஸ்டோனிஸ் 39 ரன்களும் எடுத்தனர். கடைசியில் வந்த ஹெட்மயர் 45 ரன்களும், அக்சர் பட்டேல் 17 ரன்களும் (8 பந்தில்) அடித்து டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஸ்டாய்னிஸ் 39 ரன்களில் வெளியேறினார். அதிரடி நாயகன் ஹெட்மயர் 5 சிக்ஸர்கள் விளாசி 45 ரன்கள் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தானுக்கு டெல்லி 185 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.

பட்லர் 13 ரன்னில் வெளியேற ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்கள் சஞ்சு சாம்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். டெல்லியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ராஜஸ்தான் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. நான்கு ஓவர்கள் வீசிய அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார்.ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here