பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு தடையா?

இஸ்லாமாபாத்: சட்டத்திற்கு விரோதமான ஆன்லைன் செய்திகளை வெளியிட்டது. அநாகரிகமான வீடியோக்கள் வெளியிட்டது தொடர்பாக பாகிஸ்தானிலும் டக் டாக் செயலியை தடை செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் ராய்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ”தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமான மற்றும் அநாகரிகமான செய்திகளை, வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று டிக் டாக் செயலிக்கு எச்சரிக்கை விடுத்து வந்தோம். ஆனால், அவர்கள் தொடர்ந்து நிராகரித்து வந்தனர். இதனால் தடை செய்ய முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.

இந்தியாவில் முதன் முறையாக இந்த செயலி தடை செய்யப்பட்டது. இதையடுத்து அமெரிக்காவும் தடை செய்ய முயற்சித்தது. அந்த நாட்டில் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானிலும் தடை செய்ய அந்த நாடு முடிவு செய்து இருக்கிறது. இந்தத் தடை பாகிஸ்தானில் தற்காலிகமானதாக கூட இருக்கலாம்.

ஆனால் இந்தியா கடந்த ஜூன் மாதம் டிக் டாக் செயலியை தடை செய்தது. மேலும் எல்லையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 58 செயலிகளை தடை செய்து இருந்தது. இந்தியாவில் மட்டும் இந்த செயலிக்கு 200 மில்லியன் பயனாளிகள் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here