திருமண ரகசியத்தை உடைத்த ராணா.!!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ராணா டகுபதி.

இவருக்கு மீஹிகா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது உங்களுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார் நடிகர் ராணா.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு மீஹிகாவை சிறுவயதில் இருந்தே தெரியும். அவர் என் சகோதரியுடன் பள்ளிக்கு செல்வார்.

திடீரென அவர்கள் மும்பைக்குச் சென்று விட்டனர். இந்த ஊரடங்கு காலத்தில் தான் நான் அவரிடம் மீண்டும் பேசினேன். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. உடனே வீட்டில் கூறி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை நடத்த முயற்சி செய்தோம்.

அப்போது கொரானா வேகமாக பரவிய காலம் என்பதால் ஸ்டூடியோவில் திருமணத்தை நடத்த முடிவு செய்து எங்கள் வீட்டு பக்கத்தில் இருந்த பிரபல ஸ்டுடியோவை தேர்வு செய்தோம்.

வீட்டிலிருந்து ஸ்டுடியோவுக்கு சென்று 5 நிமிடம் என்பதால் திருமணத்தின் போது மணக்கோலத்தில் நடந்தே தான் சென்றேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here