பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில், 19 வயது இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து, 54வது ரேங்க்) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சோபியா கெனினை (21 வயது, 6வது ரேங்க்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். இந்த சாதனையை படைக்கும் முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ஸ்வியாடெக்.