சுங்கைபூலோ ஆர்.ஆர்.ஐ.ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய பணிக்கு நிதியுதவி

சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ.யில்  உள்ள  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கூரை (மராமத்து) பணிகள் மேற்கொண்டது. அந்த பணிகளில் ஒன்றான ஆலய அலுவலகம், குருக்கள் இல்லம் மற்றும் மணமகன் அறை கூரையின் முன்வாசல் அகல பகுதி தற்பொழுது சிறியதாக உள்ளதால் மழை காலங்களில் மழை நீர் உள்ளே நுழைந்து பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த கூரை பகுதியை பழுது பார்க்கப்பட்டது. இதனால் மழை நீர் உள்ளே செல்வதை தவிர்க்கப்பட்டது. இந்த கூரை பகுதியை அகல படுத்துவதற்கான முழு செலவுகளை முன்னாள்  ஆர்ஆர்.ஐ.ஐ தோட்ட வாசியும், மஇகா பண்டார் பாரு பெக்கான் கிளை தலைவருமான  இரவிந்தர் முத்துசாமி அவர்களிடம் ஆலய நிர்வாகம் இந்த செலவுக்கான உதவியை கேட்டுக் கொண்டதிற்கிணங்க அந்த முழு மொத்த செலவுகளையும் அதாவது  ஆயிரத்து முன்னூறு வெள்ளியையும்  (வெ.1300) வழங்க ஓப்புக் கொண்டார்.

 இந்த கூரையை அகல படுத்தி செய்து முடித்து கொடுத்த அவர்களுக்கு ஆலய நிர்வாக குழுவினர் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக ஆலய தலைவர் திரு. கா. இராஜேந்திரன் தெரிவித்துக்கொள்வதோடு மேலும் தொடர்ந்து நமது ஆலயத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here