2021ல் தாமரை மலரும்

”பதவியை எதிர்பார்த்து, பா.ஜ.,விற்கு வரவில்லை; மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளேன்,” என, நடிகை குஷ்பு கூறினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, நேற்று முன்தினம், டில்லியில் பா.ஜ.,வில் இணைந்த, நடிகை குஷ்பு, நேற்று தமிழக பா.ஜ., தலைவர் முருகனுடன், சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில், பா.ஜ., தொண்டர்கள், மேளதாளங்கள் முழங்க, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின், சென்னை, தி.நகரில் உள்ள, கட்சி தலைமை அலுவலகமான, கமலாலயம் சென்றனர். அங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.குஷ்பு அளித்த பேட்டி:பா.ஜ.,வில் இணைந்தது, மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டிற்கு நல்லது நடக்க, பா.ஜ., வளர வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர வேண்டும்.நல்லது செய்கிறதுமாற்றங்கள் இல்லாமல், மக்கள் வாழ முடியாது. கொள்கை தான் மாறக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் கொள்கை.காங்கிரசில் என்னை அவமதித்தனர்; கூட்டத்திற்கு அழைக்கவில்லை. 5ம் தேதி, டில்லியில் இருந்து சொன்னதால், கூட்டத்திற்கு சென்றேன்.

இருக்கும் இடத்திற்கு விசுவாசம் காட்டினேன்.எதிர்க்கட்சியில் இருக்கும் போது, எதிர்ப்பது தான் கொள்கை. அந்த வேலையை, நான் செய்தேன். அதேநேரம், பிரதமர் மோடி, முத்தலாக் முறைக்கு தடை விதித்த போது வரவேற்றேன்.காங்கிரஸ் கட்சி, தற்போது வேண்டாம் எனக்கூறும் திட்டங்கள் எல்லாம், அக்கட்சியால் ஆரம்பிக்கப்பட்டவை தான். அவற்றை, பா.ஜ., செயல்படுத்தும் போது, ஏன் எதிர்க்க வேண்டும்; அதில், எனக்கு உடன்பாடில்லை.காங்கிரஸ் கட்சிக்காக, அனைத்து மாநிலங்களிலும், பிரசாரம் செய்ய சென்றபோது, நான் நடிகையாக தெரியவில்லை.

வெளியில் வந்த பின், ‘நடிகையாக பார்த்தோம்’ என்கின்றனர். இதிலிருந்து, அவர்கள் சிந்தனை எப்படி என்பது தெரிகிறது.காங்கிரஸ் கட்சியில், தலைமை குறித்து, கடிதம் எழுதியவர்களை ஒதுக்கி வைத்துள்ளனர். உண்மை பேச சுதந்திரம் இல்லாதபோது, அந்த கட்சி, மக்களுக்கு எப்படி நல்லது செய்யும்?பா.ஜ., மக்களுக்கு நல்லது செய்கிறது. 2014ல் இருந்து, தமிழக மீனவர்கள் யாரும் இறக்கவில்லை.பதவியை எதிர்பார்த்து, பா.ஜ.,விற்கு வரவில்லை; மக்களுக்கு நல்லதுசெய்யவே வந்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.கூறவில்லைகட்சி தொண்டர்களிடம், அவர் பேசியதாவது:வரும் சட்டசபை தேர்தல் முக்கியமானது.

இதுவரைக்கும், தமிழகத்தில், பா.ஜ., இல்லை என கூறுவோருக்கு, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில், தாமரையை மலர வைத்து காட்டுவோம்.மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். பல திட்டங்களை, எதிர்க்கட்சிகள் தவறாக எடுத்துரைத்துள்ளன. அதை சரியாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.வேளாண் சட்டம், விவசாயிகளுக்கு மிகவும் பயன் அளிக்கக் கூடியது. அதை, எதிர்க்கட்சிகள் தவறாக சித்தரிக்கின்றன.

உண்மையை, நாம் எடுத்துரைக்க வேண்டும்.அதேபோல், இன்னொரு மொழி கற்பதில் தவறில்லை. தேசிய கல்விக் கொள்கையில், மொழி திணிப்பு இல்லை. மாணவர்கள் விரும்பும் மொழியை படிக்கலாம்.தாய்மொழி கற்க வேண்டாம் என்று, யாரும் கூறவில்லை.மரியாதை கிடைக்காதுஇது, மக்கள் நலனுக்காக, மோடி எடுத்த முடிவு. சொடுக்கு போடும் நேரத்தில், காலம் கடந்து விடும்.

எனவே, இப்போதே தேர்தல் பணியை துவக்க வேண்டும். வரும், 2021ல் தாமரை, மிகப்பெரிய அளவில், தமிழகத்தில் மலரும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ”கட்சியை பலப்படுவதற்காக, ஒரு தலைவர் எல்லாரிடமும் பேசி, இந்தக் கட்சிக்கு வாருங்கள் என அழைக்கிறார்.”இன்னொருவர், ஆறு ஆண்டுகளாக, அந்த கட்சியில் இருந்ததற்குப் பின்னரும், வெறும் நடிகையாகத் தான் பார்த்தேன் என்கிறார். காங்கிரசில் இருப்பவர்களுக்கும் மரியாதை கிடைக்காது. வெளியே போகிறவர்களுக்கும் மரியாதை தர மாட்டார்கள்,” என்றார்.போலி திராவிட சித்தாந்தம்!வருமான வரித்துறை முன்னாள் அதிகாரி சரவணகுமார் பேசியதாவது:போலியான திராவிட சித்தாந்தம், கட்சி என்ற பெயரில், தமிழகம் முழுதும் பரவியுள்ளது.

தமிழகம் தாண்டி எங்கு சென்றாலும், நீட், ஹிந்தி திணிப்பு குறித்த பேச்சு கிடையாது. தமிழகத்தில் மட்டுமே உள்ளது. ஏனெனில், அது போலியான திராவிட சித்தாந்தம். அதை உடைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தமிழகத்தை தேசியத்தில் சேர்க்க வேண்டும். அந்த கடமை, எனக்கு உள்ளதாக உணர்கிறேன். 1,000 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவிற்கு பொதுவான தலைவர் கிடைத்துள்ளார். அவரது கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என கூறிய பல முன்னோர்கள், இந்த மண்ணில் இருந்துள்ளனர். அதை, ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வது, என் பணி.இவ்வாறு, அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here