மின்தூக்கியின் மின் யூனிட்டுகள் சேதம்

பண்டார் பாரு செந்தூல் பிளாக் 37 இல் இரண்டு லிஃப்ட் யூனிட்களை சூறையாடிய குற்றவாளிகளை அடையாளம் காண கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்) சுற்று தொலைக்காட்சி (சி.சி.டி.வி) காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது.

நியமிக்கப்பட்ட ஒப்பந்தக்காரரால் நிறுவப்பட்ட லிஃப்ட் சுவர்களின் சேதத்தை ஆய்வு செய்ததாக மாந்கர் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பொறுப்பற்றதன்மை அடாவடி நபர்களால் செய்யப்பட்டது.  இதனை ஆராய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.  குற்றவாளி அடையாளம் காணப்பட்டவுடன், டி.பி.கே.எல் இந்த விஷயத்தை அமலாக்கப் பிரிவுக்கு, மேலதிக நடவடிக்கைகளுக்காக விரிவுபடுத்தும் .

பொதுமக்களின் பயன்பாட்டுக்கான 14 லிஃப்ட் யூனிட்டுகளில் இரண்டில் காழ்ப்புணர்ச்சியைச் சித்தரிக்கும் வகையில் ‘வர்கா செண்தூல்’ பேஸ்புக் பக்கத்தில் ஓர்  இடுகை வைரலாகியது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, சி.சி.டி.வி.களை நிறுவுவதன் மூலம் டி.பி.கே.எல் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here