கொறச்சுடீங்களே மஞ்சிமா!

தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன். கேரளா நடிகையான இவர் தனது பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

சத்ரியன், தேவராட்டம், இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது மலையாள படங்களில் கவனத்தை செலுத்தி வரும் மஞ்சிமா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளின் கவனத்திலே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது மஞ்சிமா மோகன் இந்த லாக்டவுனில் உடல் எடையை குறைத்து கிக்குனு மாறி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை… கொழு கொழுன்னு இருந்த கன்னம் இப்போ ஒட்டிபோன ஓமக்குச்சி போல் ஆகிடுச்சே அய்யகோ… என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here