28 ஆண்டுகளுக்குப் பின் சேரும் அரவிந்த்சாமி & மதுபாலா ஜோடி !

தலைவி படத்தில் எம்ஜிஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் மனைவியாக நடிக்க நடிகை மதுபாலா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் எம் ஜி ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது எம்ஜிஆரின் மனைவியான ஜானகி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மதுபாலா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறார். இதன் மூலம் ரோஜா படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் திரும்பவும் சேர்ந்து நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here