பிறந்து 20 நாளான சிசு மரணம்

ஜோகூர் பாரு: இங்குள்ள இஸ்கந்தர் புத்ரியில் தஞ்சோங் குபாங்கில் உள்ள ஒரு வீட்டில் 20 நாள் பெண் குழந்தை பால் மூச்சுத் திணறி இறந்ததாக நம்பப்படுகிறது.

காலை 10 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம், குழந்தையின் வளர்ப்பு தந்தை, 35 வயதான மெக்கானிக்கால் உணரப்பட்டதாக, இஸ்கந்தர் புத்ரி ஒ.சி.பி.டி உதவி ஆணையர் துல்கைரி முக்தார் கூறினார். குழந்தை மயக்கமடைந்ததை தொடர்ந்து தஞ்சோங் குபாங் கிளினிக்கைத் தொடர்பு கொண்டார்.

கிளினிக்கிலிருந்து வீட்டிற்கு வந்த ஒரு மருத்துவ ஊழியர் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார்வ கைப்படுத்தியுள்ளனர். – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here