இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனனும் நடித்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று செய்திகள் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து quitpannuda என்ற பாடல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த பாடல் தற்போது வரை யூடியூபில் 2,982,901 பார்வையாளரர்கள் 415K லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் விரைவில் மூன்று மில்லியன் பார்வையாளராகளை பெற்று விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.