பிலிப்பைன்ஸில் வரலாறு காணாத வெப்பம்; வீட்டிலிருந்து கற்றல்,கற்பித்தல் முறை அமல்

மணிலா:

பிலிப்பைன்ஸில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருவதால் சில பள்ளிகள், வீட்டிலிருந்து கற்பிக்கும் முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.

கோவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போதைய நிலை அந்தக் காலகட்டத்தை நினைவூட்டுவதாகக் கூறப்படுகிறது.

வரும் ஆண்டுகளில் மேலும் மோசமான பருவநிலையால் கல்வி சார்ந்த அம்சங்களில் மாணவர்களிடையே வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கோவிட்-19 காலத்தில் ஆக அதிக நாள்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்ட நாடுகளில் பிலிப்பைன்ஸுசம் ஒன்று. கணினிகள், இணையத் தொடர்பு இல்லாத குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது வழக்கத்துக்கு மாறாக அதிக வெப்பநிலையால் பிலிப்பைன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்ற வாரம் அந்நாட்டில் உள்ள 7,000 பள்ளிகள் விட்டிலிருந்து கற்றல் முறையை நடைமுறைப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here