அமெரிக்க தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றால், நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று, அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம், மந்தமான பொருளாதாரம், நிறவெறி பிரச்னையால் நாட்டின் அமைதியின்மை ஆகியவற்றுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர், ஜார்ஜியாவில் தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்று இரண்டு மணி நேரம் பேசினார். அப்போது, ‘எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட போது எனது எதிரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது நடைபெறும் அதிபர் தேர்தல், அமெரிக்க அரசியலில் வரலாற்றில் மிக மோசமான  வேட்பாளருக்கு எதிராக போராடுவது எனக்கு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தற்போது பயப்படுகிறார். நீங்கள் இதனை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் தோற்பதை  உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அவ்வாறு நான் தோற்றால் என் வாழ்நாள் முழுவதும், நான் என்ன  செய்யப் போகிறேன்? எனது அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளரிடம் தோற்பதா? இந்த சமூகத்திற்கு அப்போது நான் என்ன சொல்லப் போகிறேன். எனக்கு இது பிடிக்காது.

அதனால், நான்  நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்’ என்றார். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், அதிபர் தேர்தலில் இந்திய-அமெரிக்க சமூகத்திடமிருந்து ஜோ பிடன் பெரும் ஆதரவைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்துடன், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் தேர்தல் தோல்வி குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here