கள் விற்று குடும்பத்தை காக்கும் கராத்தே சாம்பியன்!

தேசிய கராத்தே சாம்பியனான முன்டா(26) ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே கராத்தே கற்று வருகிறார். இவர், மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு வென்றுள்ளார். அத்துடன், பல தேசிய அளவிலான போட்டியிலும் கலந்துக் கொண்டுள்ளார். அவரது தாயார் தினக்கூலி தொழிலாளி. ஆனால், முதுமை காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தாயும் மகளும் இணைந்து ஹாண்டியா என்ற கள்ளை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இது குறித்து முன்டா குறிப்பிடுகையில் “என் குடுபத்தின் வறுமை காரணமாக ஊரடங்கு காலத்தில் இந்த தொழிலை தொடங்கினோம். குடும்ப செலவு மற்றும் கராத்தே பயிற்சிக்கும் இது தான் சிறந்த வழியாக உள்ளது.

கராத்தேயில் நாம் தான் செலவு செய்ய வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் செல்வதற்கும், பயணத்திற்கும் நிறைய பணம் தேவைப்படும். அத்துடன், நான் இதுவரை பெற்ற பரிசுகளை வைப்பதற்கு கூட என் வீட்டில் இடமில்லை. பல மெடல்கள் சேதமடைந்துவிட்டன.

எதாவது, உதவி அல்லது வேலைகிடைக்கும் என்று நினைத்தேன். அனால், எதுவும் நடக்கவில்லை. வேறு வழி தெரியாமல் உள்ளூர் கள் விற்று குடும்பத்தை காத்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here