யோகிபாபுவுக்கு கவுண்டமணி சொன்ன அறிவுரை

தமிழ் சினிமாவில் சந்தானம் ஹீரோவாக நடிக்க துவங்கிய பின், நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் யோகிபாபு. தற்போது அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை எல்லோரின் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இதனால், அவரின் சம்பளமும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘காமெடி கிங் நடிகர் கவுண்டமணி தனக்கு கொடுத்த அறிவுரையைத்தான் இப்போதும் பின்பற்றி வருகிறேன். தம்பி யோகிபாபு நீ எதை நோக்கி ஓடுகிறாயோ அதை நோக்கி ஓடிட்டே இரு.. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பி பாத்தே, உன்னை தின்னையில உட்கார வச்சுடுவானுங்க.. உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்கு தெரியனும்’ அப்படினு சொன்னார்.

மேலும், கோலமாவு கோகிலா படம் பார்த்துவிட்டு அண்ணன் வடிவேலு மற்றும் விவேக் ஆகியோர் என்னை நேரில் அழைத்து பேசினார்கள். அனைவரும் எனக்கு முன்னோடிகள். எல்லோரும் என் மீது அக்கறையாக இருக்கிறார்கள். விவேக் சாரோடு பிகில், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here