1.6 மில்லியன் வழிப்பறி செய்த மூவர் கைது

பணம் பட்டுவாடா செய்யும் ஒருவரின் ஊழியரை வழிபறித்து 1.6 மில்லியன் வெள்ளி தொகையை கடந்த 8.10.2020 ஒரு பேரங்காடியின் முன்புறம் பாதிக்கப்பட்டவரை தாக்கி மற்றும் கண்களில் ஸ்பேரே அடித்து இரண்டு பேர் அப்பணத்தை கொள்ளையிட்டு மைவி காரில் தப்பிச் சென்றுள்ளனர் என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில்
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ சைபுல் அஸ்லி கமாருடின் தெரிவித்தார்.

இது குறித்த புகாரினை பெற்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 31 வயது முதல் 41 வயதுடைய 3 ஆடவரை வெவ்வேறு இடங்களில் 16.10.2020 அன்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1.03 மில்லியன் வெள்ளி ரொக்கம் மற்றும் தங்க கட்டிகள், மைவி கார் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அடுத்த கட்ட விசாரணையில் கொள்ளையிட்ட பணத்தில் இருந்து மைவி கருக்கான மொத்த தொகையையும் செலுத்தி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவரை இவ்வாடவர்கள் 5 நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

அவர்கள் மீது எந்தவித குற்றப் பதிவும் இல்லை எனவும் அம்மூவரையும் வரும் 22ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுவர் என்று அவர்

செக்‌ஷன் 392 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏசிபி சைபுல் கூறினார். இவர்கள் மூவரும் கல்வியை முடித்து வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

பணம் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் பெரிய தொகையை கொண்டு செல்லும்போது உடன் ஒரு பாதுகாவலரை அனுப்புவது மற்றும் ஒரே பாதையில் பயன்படுத்தாமல் வெவ்வேறு பாதையை பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

இப்புகாரினை பெற்றவுடன் செந்தூல் மாவட்ட குற்ற புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி மூவரை கைது செய்திருப்பதற்கு பாராட்டினை தெரிவித்து கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here