விஜய் தற்போது ‘கோட்’ படத்தில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் ஷுட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து ‘தளபதி 69’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இந்நிலையில் இப்படம் குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். இவர் அரசியலில் இறங்கியது தொடர்ந்து, சினிமாவிற்கு முழுக்கு போட போடுகிறார். இது சம்பந்தமான அறிவிப்பு வெளியானதில் இருந்தே, விஜய்யின் தீவிர ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். இதனிடையில் விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.
விஜய் தற்போது ‘கோட்’ படத்தினை இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் ஜெயராம், மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் மற்றும் சினேகா, லைகா, மீனாட்சி சௌத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடிக்கின்றனர்.





















