தமிழ் ராக்கர்ஸ் நிரந்தரமாக மூடல் – சினிமா தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

பிரபல சினிமா தளமான தமிழ்ராக்கர்ஸ் தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்த ஒரு புதிய படம் வெளியானலும் சரி, அந்த படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் -ல் தளத்தில் வெளியாகும். இதனால், அந்த படத் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சினிமா தியோட்டருக்கு சென்று படம் பார்க்கும் நிலை மாறி, இணையத்தில் படம் பார்க்கும் நிலை உருவானது. இதனால், சினிமா தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும், ராக்கர்ஸ் பெயரில் சில மாற்றங்கள் செய்து வெளியிடப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்திவருபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இது தொடர்பாக, நடிகர் தங்க தலைவர் விஷாலும், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸ் தளம் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here