கோத்தா கினாபாலு நீர் வழங்கல் தடை; வணிகங்கள் பாதிப்பு

கோத்தா கினாபாலு:

கோத்தா கினாபாலு நகரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நீர் வழங்கல் தடை அங்குள்ள குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதுடன், பெரும்பாலும் வணிகங்களுக்கு, குறிப்பாக சுற்றுலாத் துறையில், குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தண்ணீர் பிரச்சனைகள் காரணமாக சுற்றுலாப்பயணிகள் மொத்தம் RM30,000 வரை பணத்தைத் திரும்பப் பெறுவதாக ஒரு ஹோம்ஸ்டே நடத்துனர்கள் கூறியதாக பார்ட்டி வாரிசானின் கோத்தா கினாபாலு மாவட்ட செயலாளர் லோய் கோக் லியாங் தெரிவித்தார்.

மேலும் இங்குள்ள “பல ஹோட்டல்கள் தண்ணீர் லோரிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, மேலும் நீர் விநியோகத்தடையின்போது ஏர் கண்டிஷனிங்கை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, இது ஒரு சங்கடமான சூழ்நிலையை சுற்றுலா பயணிகளுக்கு உருவாக்குகிறது.

“நீர் வழங்கல் தடை காரணமாக ஷாப்பிங் மாலுக்குள் உள்ள பல கழிப்பறைகளும் மூடப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்,

மேலும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயலுக்கு குடியிருப்பாளர்களும் வணிக உரிமையாளர்களும் பொறுப்பேற்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள நீர் விநியோகப் பிரச்சினைகளைத் தீர்க்க மாநில நீர்வளத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று சபா பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஷாஹெல்மே யஹ்யா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here