மாணவரை அடித்து மிரட்டிய இருவர் கைது- மேலும் ஒருவரை போலீஸ் தேடுகிறது

7.10.20 பெட்டாலிங் காவல்நிலையத்தில் ஒரு தனியார் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர் புகார் செய்துள்ளார். அப்புகாரில் கடந்த 6ஆம் தேதி இரவு 8.45 மணியளவில் அம்மாணவர் தங்கியிருந்த கோத்தா டாமான்சாரா பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் நின்று கொண்டிருந்த போது ஒரு காரில் வந்த மூவர் இம்மாணவரை காருக்குள் இழுத்து தாக்கியுள்ளனர்.

பின் அம்மாணவரிடம் உன்னை கடத்த கூடாது என்றால் ஒரு மாதக் காலத்தில் 10 ஆயிரம் வெள்ளி தர வேண்டும் மிரட்டியிருக்கிறார்கள்.

புகாரினை தொடர்ந்து D9 போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 20.10.20 இரவு 10.05 கோத்தா டாமான்சாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு ஆடவரை கைது செய்திருக்கின்றனர்.

அவரிடம் இருந்து 2 கைப்பேசிகளை கைப்பற்றியதோடு அம்மாணவரை மிரட்டிய சம்பவத்தில் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது எந்தவித குற்றப்பதிவும் இல்லை.


ஆனால் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் போலீசார் பூச்சோங்கிற்கு சென்று உள்நாட்டு ஆடவரை கைது செய்து கைப்பேசி உள்ளிட்டவைகளை கைப்பற்றியுள்ளனர். இந்த ஆடவரின் மீது கார் திருட்டு குற்றப்பதிவு இருக்கிறது.

இந்த இருவரை தவிர மேலும் ஒரு உள்நாட்டு ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரின் பெயர் குகன் முனியாண்டி @ சிவம் என்றும் தாமான் கின்ராரா பத்து 8, பூச்சோங் என்ற முகவரியில் இருந்ததாக என பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் எசானி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் குகன் என்பவரை காணும் பொதுமக்கள் உடனடியாக இன்ஸ்பெக்டர் அடாம் பிஸ்டோஸ் அமாட் 018-5744233 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவர். செக்‌ஷன் 324, 385 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படியும் வழங்கப்படும். அதே போல் செக்‌ஷன் 385 கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here