வலைதளத்தில் துப்பாக்கிகள் ஆர்டர் செய்த இளைஞர்…

விளையாட்டாக ஆஸ்திரேலிய வலைதளத்தில் துப்பாக்கிகளை ஆர்டர் செய்த ஒடிசா இளைஞரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஒடிசாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்ததால் பிறநாடுகளின் வலைதளப்பங்கங்களை பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது ஆஸ்திரேலிய வலைதளம் ஒன்றுக்கு சென்ற அந்த இளைஞர் விளையாட்டாக அந்த வலைதளத்தில் துப்பாக்கிகளை டஜன் கணக்கில் ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆர்டர் தொடர்பாக மெயில்களையும் சம்மந்தப்பட்ட நிறுவனத்துடன் பரிமாரிவந்துள்ளார். விளையாட்டாக செய்தது வினையாகப் போவதை உணர்ந்த அந்த இளைஞர் ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். இதனை பதிவு செய்த ஆஸ்திரேலிய புலானாய்வு அதிகாரிகள் தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த மாணவனை கைது செய்தனர்.

மேலும் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவனின் வீடு மற்றும் லேப்டாப்களை சோதனை செய்ததில் மாணவர் விளையாட்டுக்காக இதை செய்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து எச்சரிக்கையுடன் மாணவர்களை அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here