மொபைலிலேயே படமாக்கப்பட்ட, அகண்டன் படத்தை, டுலெட் பட நாயகன் சந்தோஷ் நம்பிராஜன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, ஒளிப்பதிவு செய்ததோடு, நாயகனாகவும் நடித்துள்ளார். இப்படம், இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய மூன்று நாடுகளில், மொபைலிலேயே படமாக்கப்பட்டுள்ளது.சந்தோஷ் நம்பிராஜன் கூறியதாவது:’ஐ போன் 11 புரோ’ மொபைலை பயன்படுத்தி, முழு படத்தையும் எடுத்துள்ளோம். மொபைலில் படமாக்கும் தொழில்நுட்பம், சினிமாவில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கும். சினிமாவை எளிமையான முறையில் எடுப்பதற்கான, புதிய வழியை காட்ட வேண்டும் என்ற என் கனவு, தற்போது நிறைவேறியுள்ளது. மொபைலும், கதையும் இருந்தால் போதும்; அனைவராலும் படம் உருவாக்க முடியும்.சீன நடிகர்களுடன் ஒரு அசத்தலான சண்டைக்காட்சிகளை, இரண்டு நாட்களில் படம் பிடித்தோம். சீனர்கள், தமிழர்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ளனர். ஹரிணி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில், 30 புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
























