பாலா இயக்கத்தில் உதயநிதி அதர்வா…

உதயநிதி ஸ்டாலின் இப்போது கண்ணை நம்பாதே உட்பட சில படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

அவற்றோடு நவம்பர் மாத தொடக்கத்தில் மகிழ்திருமேனி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில் ஏற்கெனவே பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால் அதன்பின் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இப்போது மீண்டும் அந்தப் பேச்சு வந்திருக்கிறது.இம்முறை உதயநிதி மட்டுமின்றி இன்னொரு நடிகரும் அவருடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம்.

ஆம்,பாலா இயக்கத்தில் உதயநிதி மற்றும் அதர்வா ஆகியோர் நாயகர்களாக நடிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இப்படத்தை, தற்போது அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அவரே நேரடியாகத் தயாரிக்கிறாரா? அல்லது வேறொருவர் மூலம் தயாரிக்கப் போகிறாரா? எனபது விரைவில் தெரியும் என்கிறார்கள்.

இப்படம் தொடங்கச் சில மாதங்கள் கூட ஆகலாம் என்றாலும் இப்போதே அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here