உலகளவில் கொரோனா பாதிப்பு 4.44 கோடி!

கடந்த 24 மணி நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.42 கோடியாக உயந்துள்ளது.

முதன்முதலாக சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. தொற்று பரவி கிட்டதட்ட பல மாதங்கள் ஆகியுள்ள போதிலும் வைரசின் ருத்ரா தாண்டவம் அடங்கியபாடில்லை. கொரோனாக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது இன்னும் உலகின் முன்னணி நாடுகளுக்கே சவாலாக உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4 கோடியே 42 லட்சத்து 36 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு கோடியே 6 லட்சத்து 21 ஆயிரத்து 399 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 922 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 44 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்து 337 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

அமெரிக்கா – 9,038,030
இந்தியா – 7,988,853
பிரேசில் – 5,440,903
ரஷியா – 1,547,774
பிரான்ஸ் – 1,198,695
ஸ்பெயின் – 1,174,916
அர்ஜென்டினா – 1,116,609
கொலம்பியா – 1,033,218
இங்கிலாந்து – 917,575
மெக்சிகோ – 895,326
பெரு – 892,497
தென்னாப்பிரிக்கா – 717,851

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here