கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்

எண்கண் முருகன் கோயில் இந்து மதம் கடவுள் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது தமிழ்நாடு திருவாரூர் மாவட்டதில் அமைந்துள்ள எண்கண் கிராமத்தில் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். திருவாரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் எண்கண் அமைந்துள்ளது.

பிரணவ மந்திரத்திற்கு உட்பொருள் என்ன என்று முருகப் பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை முருகன் சிறையிலடைத்தார். பிரம்மாவின் சிருஷ்டி தொழிலையும் தானே ஏற்றார். சிறை விடுத்தும் பிரம்மாவிடம் சிருஷ்டி தொழிலைத் தராது தானே செய்தார். இதனால் பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானைத் தனது எட்டுக் கண்களால் பூஜித்தார். சிவபெருமானிடம் நடந்தவற்றைக் கூறி தனது படைத்தல் தொழிலைத் திரும்பப் பெற்றுத்தரப் பிரம்மா வேண்டுகிறார். முருகனோ பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாத பிரம்மன் படைத்தல் தொழிலைச் செய்வது முறையல்ல என்று கூற, சிவபெருமான் முருகனை சமாதானப்படுத்தி தனக்கு முன்பு படைப்பு தொழிலை தரும்படி பணிக்கிறார்.

முருகனும் இத்தலத்தில் பிரம்மாவிற்குப் பிரணவ உபதேசம் செய்து தென்முக கடவுளாய் அமர்ந்து உபதேசித்து சிருஷ்டித் தொழிலை திரும்பவும் பிரம்மாவிடம் தந்தார். பிரம்மா எட்டுக் கண்களால் பூஜித்தமையால் இத்தலம் எண்கண் என்றும், பிரம்மபுரம் என்றும் வழங்கப்பட்டது.

பிரபலமான நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த கோவிலில் முருகன் சிலையை செதுக்கிய சிற்பி, சிக்கல் மற்றும் எட்டுகுடி ஆகிய இடங்களில் சிற்பத்தை செதுக்கிய அதே நபர் எனப்படுகிறது. சிக்கலில் சிலை சிற்பம் செய்தபின், அச்சிற்பி தனது வலது கட்டைவிரலை வெட்டிகொண்டார், அதனால் அவர் சிக்கலில் உள்ள உருவத்தின் அழகை மிஞ்சும் எதையும் எங்கும் உருவாக்க மாட்டார் என்பதை உறுதிசெய்தார். எட்டுகுடி சிலை வடிவத்தை சிற்பிய பிறகு, அவர், அதன் அழகு சிக்கலில் உள்ள சிற்பத்தை மிஞ்சியதாக உணர்ந்து, தன்னை தண்டித்துக்கொள்ள தன் கண்களை குருடாக்கிக்கொண்டார். ஆகவே அவர், எங்கணில் முருகனின் சிலையை சிற்பம் போது, ஒரு பெண்ணின் உதவியை நாடினார். அப்போது தவறி அவர், அந்தப் பெண்ணின் ஒரு விரலை வெட்டி, இரத்தம் வெளியேற தொடங்கியது. இந்த இரத்தத் துளிகள் அவரது கண்களில் விழுந்து அவரது கண்களை குணப்படுத்தியது.

இந்தக் கோவில் திருவாரூர் மாவட்டம் எண்கண் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது ஒரு சிவ ஆலயம். இருந்தாலும் முருகனுக்கு என்று இந்த கோவிலில் தனிச்சிறப்பு உண்டு. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்த கோவிலைப் பற்றியும், இந்த கோவிலில் உள்ள முருகப்பெருமானின் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எண் என்பது 8 என்ற கணக்கை குறிக்கின்றது. நான்கு தலைகளை கொண்ட பிரம்மனுக்கு எட்டு கண்கள். பிரம்மன் சிவனை நினைத்து இத்தலத்தில் வழிபட்டதால் இதற்கு எண்கண் என்ற பெயர் வந்தது.

வியாழக்கிழமை தோறும் இங்குள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் குரு தோஷம் இருந்தால் நீங்கிவிடும். மாணவர்களுக்கான கல்வி தடைகளும், தோஷங்களும் இத்தலத்தில் உள்ள குரு பகவானால் நீக்கப்படுகிறது.

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் விசாக நட்சத்திரம் வரும் நாளில், முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, இத்தலத்தின் குளத்தில் குளித்துவந்தால், இழந்த பார்வை திரும்பக் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்காரக தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது எண்கண். எதிரிகளின் பயம் நீக்கி பக்தர்களைக் காக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.

செவ்வாய் கிழமையில் இங்குள்ள முருகனை தரிசித்து வந்தால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபட்டால் பதினாறு செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இந்தத் தலத்தில் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, திருமண தடை நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here