ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைப்பேன்

உலக அளவில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால் நீண்ட நாட்களாக ஐநா சபை இதற்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டது. அதன் விளைவாக 2016-ஆம் ஆண்டு ஏழு நாடுகளின் சம்மதத்துடன் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.உலக அளவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட பெரிய நாடுகள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை ஆகும். இவை தங்கள் தொழிற்சாலைகளிலிருந்து கார்பன் புகைகளை வெளியிடுவதால் குளோபல் வார்மிங், கிரீன் ஹவுஸ் எபெக்ட் அதிகரித்து துருவப் பகுதிகளில் பனி பாறைகள் உருகி, கடல் மட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இதனால் சிறிய தீவுகள் காணாமல் போகின்றன. மேலும் உலக மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது.இதனைத்தடுக்க இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பின்னர் விலகியது. இது பிற நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளானது.

சமூக அக்கறை இல்லாமல் டிரம்ப் அரசு செயல்படுகிறது என சீனா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி இருந்தன. தற்போது வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார்.தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக அமெரிக்காவை பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்கத் தயாராக இருப்பதாகவும் உலக அளவில் காற்று மாசுவை குறைக்க தான் முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இது ஜனநாயக கட்சிக்கு நற்பெயரை பெற்றுத் தந்துள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகையில் உலக நாடுகளில் அதிக அளவு கிரீன் ஹவுஸ் வாயுக்களை வெளியிட்டு வருவது அமெரிக்காதான். அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டாலே ஒழிய சுற்றுச்சூழல் மாசு குறைய வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

2050-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் காற்று மாசுவை முழுவதுமாக ஒழிக்கும் தொலைநோக்குப் பார்வையோடு தான் செயல்பட உள்ளதாக ஜோதி தெரிவித்துள்ளார்.தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 2021 ஜனவரி மாதமே அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைய வழிவகை செய்யவிருப்பதாக ஜோ தெரிவித்துள்ளது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here