அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,
அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,05,155 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 19,193 கோடி, மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 5,411 கோடி, இறக்குமதிக்கான ஜிஎஸ்டி வருவாய் ரூ. 52,540 கோடி மற்றும் செஸ் வருவாய் ரூ. 8,011 கோடி. கடந்த செப்டம்பர் மாதத்தில் வசூலானதைவிட 10% அதிகமாக அக்டோபரில் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ரூ. 95,379 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.