கொரோனா தொற்றில் இருந்து மீண்டு தாயகம் திரும்பிய இந்திய பேட்மிண்டன் வீரர்கள்

ஜெர்மனியில் நடைபெற்ற சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், களம் இறங்க இருந்த நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்‌ஷயா சென்னின் தந்தையும், பயிற்சியாளருமான டி.கே.சென்னுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்த லக்‌ஷயா சென் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் ஆகியோர் போட்டியில் இருந்து விலகினர்.

தொடாந்து 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் தங்களை நாடு திரும்ப நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் பேட்மிண்டன் சம்மேளனத்துக்கும், விளையாட்டு அமைச்சகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியானதும் 5 பேரும் விமானம் மூலம் நேற்று அதிகாலை தாயகம் திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here