காமன்வெல்த் போட்டிகள்: மலேசியாவுக்கு தங்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் முஹம்மது அஸ்னில் பின் பிடின், மொத்தம் 299 கிலோ எடையைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றார். அதேவேளையில், பாப்புவா நியூ கினியின் மோரியா பாரு மொத்தம் 282 கிலோ எடையைத் தூக்கி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here