2,500 ஆண்டுகள் பழமையான ‘மம்மி’கள்

எகிப்து நாட்டில் கெய்ரோ அருகே 100 பழங்கால சவப்பெட்டிகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இவை நன்கு வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த சவப்பெட்டிகளில் பலவற்றில் பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் (‘மம்மி’கள்) இருந்தன. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தகவல்கள் கூறுகின்றன. கடந்த மாதம் நன்கு பாதுகாக்கப்பட்ட, ‘சீல்’ வைக்கப்பட்ட 59 மர சவப்பெட்டிகளை கண்டுபிடித்த நிலையில், இப்போது இந்த பழங்கால சவப்பெட்டிகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றை கிசா பிரமிடுகளுக்கு அருகே எகிப்து கட்டும் கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் உள்ளிட்ட 3 அருங்காட்சியகங்களுக்கு கொண்டு சென்று காட்சிக்கு வைக்கப்போவதாக எகிப்து சுற்றுலா, தொல்பொருள் மந்திரி கலீத் எல் அனானி தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘மம்மி’கள், எகிப்தை ஆட்சி செய்து வந்த டோலமிக் வம்சத்தை சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here