இந்த பொருள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டும்

ஒரு இல்லத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருக்க அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்க வேண்டும். மாறாக எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி காணாமல் போய்விடும். எப்பொழுதும் சண்டையும், நிம்மதி இல்லாமலும் இருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். இதனை சரிசெய்வதற்கு கல் உப்பு மட்டுமே போதுமானது.

கடலில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பிற்கு தெய்வீக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய கல்லுப்பைக் எட்டு திசைகளிலும் வைப்பதால், வீட்டில் இருக்கும் எட்டு திக்கிலும் இருந்து எதிர்மறை ஆற்றல் கிரகிக்கப்பட்டு பஸ்பமாகிவிடும். உங்கள் வீட்டில் இருக்கும் எட்டு திசைகளிலும் ஒரு சிறிய பௌலில் கல் உப்பை நிரப்பி வைத்து விடுங்கள். ஒவ்வொரு கல் உப்பு வைத்திருக்கும் இடத்திலும் ஒரு அகல் விளக்கில் வேப்பெண்ணை ஊற்றி தீபமேற்ற வேண்டும். வேப்ப எண்ணெயை தவிர வேறு எந்த எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது. வேப்ப எண்ணெயில் இருக்கும் கசப்புத்தன்மை வீடு முழுவதும் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளும்.

இதை தீய சக்திகளின் ஆற்றல் அதிகமாக இருக்கும் அமாவாசை நாட்களில் செய்வது மிகவும் உத்தமம். ஏதாவது ஒரு அமாவாசை நாளில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அன்றைய நாள் முழுவதும் அந்த தீபத்தை எரியவிட்டு மறுநாள் காலையில் பிரதமை திதியில் அந்த எட்டு பவுலில் இருக்கும் கல் உப்பையும் ஒன்றாக சேர்த்து நெருப்பிலிட்டு பஸ்பமாகி விடுங்கள். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி விடும். எதிர்மறை ஆற்றல்கள் என்பது நம்மிடம் இருக்கும் நல்ல சிந்தனையை சீர்குலைத்து விடும்.

புத்தி சரியான வழியை காட்டினாலும், மனம் அதை ஏற்க மறுக்கும். புத்தியும், மனமும் ஒன்றாக செயல்பட்டால் தான் நம்மால் நல்ல விஷயங்களை செய்ய முடியும். அதன் மூலம் நமக்கு நல்லதும் நடக்கும். அதனை செயல்பட விடாமல் தடுக்கும் எதிர்மறை ஆற்றல்களை அதாவது நெகட்டிவ் எனர்ஜியை நம்மிடம் இருந்து நீக்கவே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அதன் பின்னர் வீடு முழுவதும் தண்ணீரால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரிலும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. இவ்வாறு வீட்டை சுத்தம் செய்த பின் விளக்கேற்றி, தீப தூபங்கள் காண்பித்து வழிபாடுகள் செய்யுங்கள். இறை சிந்தனையில் மூழ்கி, முழு சிரத்தையுடன், பக்தியுடன் உங்களுடைய மன கவலைகளை இறக்கி வைத்து விடுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கும். எவ்வளவு துன்பங்களை நீங்கள் சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவைகளில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்பது மட்டும் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here