உலகின் சக்தி வாய்ந்த நாடாக மார்தட்டும் சீனா!

வாஷிங்டன்:

இந்தியா வளர்ந்து வருவதால், அதை எதிரியாக சீனா பார்க்கிறது. மேலும், உலகின் சக்தி வாய்ந்த நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது என, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த சூழ்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை, 70 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியா வளர்ந்து வருவதால், அதை தன் எதிரியாக, போட்டியாக சீனா பார்க்கிறது. இந்தியாவை, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, பொருளாதார ரீதியில் சிக்கல் ஏற்படுத்த சீனா முயற்சிக்கிறது.தன் சொல்படி இந்தியா நடக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு உள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன், இந்தியா, ராணுவ ரீதியில் உறவு வைத்திருப்பதையும் சீனா விரும்பவில்லை. அந்தக் கூட்டணியை முறியடிக்க துடிக்கிறது. ஆக்ரோஷம்ஆசியான் எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் உள்ள நாடுகள், பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு, இறையாண்மை, பொருளாதார வாய்ப்புகள் குறித்து சீனா கவலைப்படவில்லை.

சர்வதேச அளவில், மிகவும் சக்தி வாய்ந்த நாடாக உள்ள அமெரிக்காவை நீக்கிவிட்டு, அந்த இடத்தைப் பிடிக்க, சீனா தீவிரமாக உள்ளது. தன்னை சக்திவாய்ந்த நாடாக அங்கீகரிக்க செய்வதற்காக, பல நாடுகளை மிரட்டி வருகிறது.அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளான, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா, வியட்நாம், இந்தோனேஷியா, தைவான் ஆகியவற்றை சீனா குறிவைத்து உள்ளது.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முயற்சிக்கு, அந்த நாட்டு ராணுவம் பயன்படுத்தப்படுகிறது.

latest tamil news

இந்தியா, தைவான் என, பல நாடுகளுடன் எல்லைப் பிரச்சினையில் ஆக்ரோஷமாக சீனா செயல்பட இதுவே காரணம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here