பயணப் பெட்டியில் சடலம்: சிக்கினார் காதலி

தொழிலதிபர் ஒருவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் 45 வயதான நீரஜ் குப்தா என்பவரை நவம்பர் 14  நாள் முதல் காணவில்லை என குறிப்பிட்டு அவரது நண்பர் போலீசாரை நாடியிருந்தார்.

இந்த நிலையில் நீரஜ் குப்தாவை கொலை செய்து, சடலத்தை சூட்கேஸில் திணித்து, குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் மறைத்து வைத்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

நீரஜ் குப்தாவின் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் 29 வயதான ஃபைஸல். இவருடன் கடந்த 10 ஆண்டுகளாக நீரஜ் ரகசிய உறவில் இருந்ததாக, அவரது மனைவியின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

நீரஜ் குப்தா மாயமான விவகாரத்தில் ஃபைஸல் மீது சந்தேகம் இருப்பதாக, நீரஜின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் ஃபைஸலை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்தே நீரஜ் மாயமான பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து ஃபைஸல் வருங்கால கணவர், தாயார் என மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஃபைஸலுக்கு சுபைர் என்பவருடன் திருமணம் முடிவான நிலையில், நீரஜ் அதை கடுமையாக எதிர்த்துள்ளார்.

நவம்பர் 13 அன்று ஃபைஸலின் ஆதர்ஷ் நகரில் அமைந்துள்ள வாடகை குடியிருப்பில் வைத்தே நீரஜ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கட்டாயப்படுத்தவே ஃபைஸலின் குடியிருப்புக்கு நீரஜ் சென்றுள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, நீரஜுக்கும் ஃபைஸலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஃபைஸலின் குடியிருப்பில் இருந்த சுபைர் ஆத்திரத்தில் கத்தியால் மூன்று முறை நீரஜை தாக்கியுள்ளார்.

தொடர்ந்து நீரஜ் இறந்ததாக உறுதி செய்த பின்னர், கடைக்குச் சென்று புதிதாக ஒரு பயணப்பெட்டியை வாங்கி வந்து, சடலத்தை அதில் திணித்து மறைத்தார்.

ரயிலில் குஜராத் சென்று அங்கே பெட்டியை எறிந்துவிட்டு செய்து விட்டு டெல்லி திரும்பியுள்ளார்.

தற்போது கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் மீட்டுள்ளதாகவும், விசாரணை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here