எல் சால்வடார் நாட்டில் ஒரே நேரத்தில் 486 பேருக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் வழக்கு விசாரணை …

சாம் சால்வடார், மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடார் நாட்டில், MS-13 என்ற குற்றப் பின்னணிகள் கொண்ட பிரபல கும்பலைச் சேர்ந்த 486 பேருக்கு எதிராக மாபெரும் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. டெகோலுகாவில் அமைந்துள்ள கடுமையான பாதுகாப்புகளைக் கொண்ட சிறைச்சாலையில், கை, கால் சங்கிலியிடப்பட்ட நிலையில் கைதிகள் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்

பின்னர் 486 பேர் மீதான வழக்கு விசாரணை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கடந்த 2012 முதல் 2022 வரை நடைபெற்றதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான கொலை, ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. மேலும் அங்கு நிலவும் கும்பல் வன்முறையை, கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here