3 நாட்களில் உலகின் 7 கண்டங்கள்- கின்னஸ் சாதனை

துபாய்: யுஏஇ.யை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், 3 நாட்களில் உலகின் 7 கண்டங்களுக்கும் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த நாட்களில் 208 நாடுகளுக்கு அவர் பயணித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சை(யுஏஇ) சேர்ந்த பெண் டாக்டர் காவ்லா அல் ரோமைதி. இவர் 3 நாட்கள் 14 மணி நேரங்கள் 46 நிமிடங்கள் 48 நொடிகளில், உலகின் 7 கண்டங்களுக்கும் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த பிப்.,13  ஆம் தேதி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது பயணத்தை முடித்த இவர், இந்த நாட்களில் 208 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

latest tamil news

இதுகுறித்து காவ்லா கூறுகையில், ‘இப்பயணம் மிக்கடினமாக இருந்தது. பல நேரங்களில் பயணத்தை பாதியில் முடிக்க எண்ணினேன்.

இருப்பினும் தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எனது பயணத்தை தொடங்கினேன். விமான நிலையங்களில் பல்வேறு தடைகளை சந்திக்க நேர்ந்தது.

யுஏஇ.,யில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். நான் அவர்களது நாடுகளுக்கு பயணித்து, அவர்களின் கலாசாரத்தை அறிந்து கொள்ள விரும்பினேன் என்க்கிறார் இவர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here