கொரோனா தடுப்பு மருந்து – வெள்ளை மாளிகையின் முக்கிய அறிவிப்பு

உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பல நாடுகளில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 79 லட்சத்து 10 ஆயிரத்து 511 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 01 லட்சத்து 08 ஆயிரத்து 847 பேர் என குறிப்புகள் காட்டுகின்றன.

கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 77 ஆயிரத்து 745 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடு அமெரிக்காதான். நேற்று மட்டுமே அங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் கூடியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனா மொத்த பாதிப்பு 1,22,89,767 பேர். இவர்களில் 73,19,848 பேர் குணமடைந்துவிட்டனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்களின் எண்ணிக்கை 2,60,443 பேர்.

டெக்ஸாஸ், கலிபோர்னியா, புளோரிடா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதில் கலிபோர்னியாவில் சனிக்கிழமை முதல் சிவைப்பு மண்டலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

கொரோனா தடுப்பூசி என்பது அவசரமாகத் தேவைப்படும் நாடு அமெரிக்காதான். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே தடுப்பூசி அவசரத் தேவைக்கு வந்துவிடும் என ஃபைசர் என்ற நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை அறிவிப்பில் ‘இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவுக்கு 4 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும் விதமாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மிக வேகமாக கொரோனா பரவி வரும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஒரு மருத்துவக் குழுவை அமைத்திருக்கிறார் ஜோ பிடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here