ஜப்பான் சிறுமியின் காதல் படுத்தும்பாடு!

ஜப்பான் சிறுமி ஒருத்தி ஒருவரைக் காதலித்து அவரை இலங்கைக்கு அழைத்து வந்து திருமணம் செய்ய முயற்பட்ட சம்பவம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த சம்பவத்தில் சிறுமியை அழைத்து வந்த இளைஞனின் தாயார், சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இளைஞன் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறையினர் அந்த இளைஞருக்கு எதிராக நீதிமன்றில் விளக்கமளித்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஜப்பான் சட்டத்திற்கு அமைய 16 வயதுக்கு மேற்பட்ட சிறுமி திருமணம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சட்டம் திருத்தப்பட்டு, பெண்களின் வயத்உ எல்லை 18 ஆக மாற்றப்பட்டுள்ளதோடு இந்த சட்டம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு அமுலாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், போலீஸ் விசாரணையில் , சிறுமி தனது தாயின் தொடர்பில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தாய், பின்னர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஜப்பானில் தமது தாய்க்கு தெரிந்த இலங்கையர் ஒருவர், இங்குள்ள முன்னணி விருந்தகம் ஒன்றில் வைத்து தாயின் அனுமதியுடன் தம்மை துஷ்பிரயோகம் செய்ததாக, சிறுமி குற்றம் சுமத்தியுள்ளார்.
தம்மால் மீண்டும் ஜப்பான் செல்ல முடியாதெனவும் தமது தாயும், அவருடன் தொடர்புடைய இலங்கையரும் தம்மை துன்புறுத்தக் கூடும் எனவும் சிறுமி கூறியுள்ளார்.
அத்துடன் தனது தாயும் அவருடன் தொடர்புடைய இலங்கையரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். சிறுமியின் தாய் இவர்களின் தொடர்பை எதிர்த்ததால் அடுத்து அந்த சிறுமி, இளைஞர் ஆகியோர் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இதையடுத்து அந்த இலங்கை இளைஞர், 16 வயதுடைய சிறுமி கடந்த 26 ஆம் திகதி கொழும்பு நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.  அடுத்து அந்த இளைஞர் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி வரையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
கமெண்ட்: இளங்கன்று பயமறியாது. இலங்கைக்கு அது புரியாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here