கனடாவிலிருந்து மீட்கப்பட்டது அன்னபூரணி சிலை- பிரதமர் மோடி மகிழ்ச்சி

கனடா நாட்டிலிருந்து அன்னபூரணி சிலை மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருவது வழக்கம். கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒலித்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில், 71- ஆவது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மிகவும் பழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் வாரணாசியில் இருந்து கடத்தப்பட்ட சிலை இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சிலையை டெல்லி தேசிய அருங்காட்சியகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே நாம் காணொளியில் பார்க்கலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,பறவை மனிதன் என அழைக்கப்படும் சலீம் அலி குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் கூறினார். அதில் பறவைகளை ரசிக்க அவை குறித்த தகவல்களை திரட்ட நமக்கு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளார் சலீம் அலி என்றார் அவர்.

தொடர்ந்து அவரது உரையில், இந்தியாவின் கலாச்சாரம், வேதம் எப்போதும் உலகை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது. நியூஸிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுரவ் சர்மா அமைச்சராக சம்ஸ்கிருதத்தில் பதவியேற்றார். இந்திய கலாச்சாரத்தை வெளிநாடுகளில் பரப்புவது மிகவும் பெருமை அளிக்கிறது.

டெல்லி ஐஐடி மாணவர்கள் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். கொரோனா தடுப்பூசி விரைவிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிடும். கொரோனாவால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்தும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

 

கமெண்ட்: சொல்லுக்குச்  செம்மொழி – நெல்லுக்குள் அரிசி -கல்லுக்குள் கடவுள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here