மக்களவை ஒத்திவைப்பு
கோலாலம்பூர்- 1 டிசம்பர்
இன்று காலை தீவிபத்திற்கான எச்சரிக்கை அலாரம் அடித்ததினால் மக்களவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை உறுப்பினர்கள், அதிகாரிகள் வெளியேறி அவசரமாக பாதுகாப்பு மையத்தில் கூடினர்.
கூட்டத்தை மீண்டும் தொடக்கிய மக்களவை ஆட்சியர் டத்தோ அஸ்ஹார் அஸிஸான் ஹருண் தொழிற்நுட்ப கோளாறே எச்சரிக்கை அலாரம் அடித்ததன் காரணம் என்றார்.
இன்று காலை 10.15 மணியளவில் அறிவியல், தொழிற்நுட்பம், புத்தாக்க துணை அமைச்சர் அகமட் அம்ஸாட் ஹாஷிம் அதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.